வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (02) அடித்த பலமான புழுதிப் புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பலவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான மின்னல் தாக்கியதில் வீடுகள் உடைந்து, அதில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.
நிவாரணப் பணிகளுக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.